Categories
உலக செய்திகள்

“ஸ்பெயினில் பாரம்பரியமாக நடக்கும் காளைச்சண்டை!”.. தடை விதிக்கக்கோரி மக்கள் பேரணி..!!

ஸ்பெயினில் காலைச்சண்டை நடத்த தடை விதிக்குமாறு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி  நடத்தியுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில், பாரம்பரியமாக காளைச்சண்டை விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.  ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்த விளையாட்டில் காளைகள் அதிகமாக துன்புறுத்தப்படுகின்றன, என்று பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஸ்பெயினின் தலைநகரான, மாட்ரிட்டின் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் காளைச்சண்டைக்கு தடை விதிக்க கோரி, முரசுகளை ஒலித்துக்கொண்டு பேரணி நடத்தி சென்றுள்ளனர்.

பேரணியில் ஈடுபட்டவர்கள், நாட்டின் கலாச்சாரம் என்று காளைச் சண்டையை இனிமேலும் தொடரக்கூடாது என்று முழுக்கமிட்டார்கள். நாட்டில் கடந்த வருடம், இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதில், 47% நபர்கள் அதனை தடைவிதிக்க விதிக்குமாறு கூறுயுள்ளார்கள். மேலும் 18.6% மக்கள், காளைச்சண்டைக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |