சுவிட்சர்லாந்து மக்கள் ஒரு வருடத்திற்கும் அதிகமாக முகக்கவசம் அணிந்து வந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெடரல் கவுன்சில் கடந்த புதன்கிழமை அன்று இத்தீர்மானம் கொண்டுவந்தது. அதில் முகக்கவசம் இனி கட்டாயம் அணியத்தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிவிப்புக்கு பின்பு மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் நாட்டு மக்களில் கால்பகுதியினர், வெளிப்பகுதிகள் மற்றும் பேருந்து போன்றவற்றில் முகக்கவசம் அவசியமில்லை என்று கூறுகிறார்கள்.
இதுபோல, இளைஞர்களும் முகக்கவசம் அவசியம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் 14 லிருந்து 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 17% பேர் முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பை சிறிது காலம் தள்ளி கொண்டு வந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இளைஞர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அவசியமில்லை என்று கூறும் நிலையில், பெரியவர்கள் முகக்கவசம் இன்னும் சிறிது நாட்களுக்கு கட்டாயம் அவசியம் என்று கூறுகிறார்கள். மொத்த நாட்டு மக்களில் கால் பகுதியினர் முகக்கவசம் அவசியமில்லை என்று கூறிய நிலையில் மீதமுள்ள அனைவரும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளனர்.