Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை: 5 மாநிலங்களில்… “பெண் தலைமையில்” தீவிரவாத தாக்குதலுக்கு முயற்சி..!!

5 மாநிலங்களில், பெண் தலைமையிலான தீவிரவாத அமைப்பு கடும் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பு டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக இந்திய உளவு அமைப்பான ரா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தீவிரவாத செயல்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாலும், அவர்களின் பணப் பரிமாற்றத்தைக் கடுமையாகச் சோதித்து வருவதாலும், தீவிரவாத அமைப்புகள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், ஆகவே இந்த முறை தீவிரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்துவது ரோஹிங்கிய முஸ்லிம் பிரிவைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி அயோத்தி, கயா போன்ற இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைப்பு மாநில உளவு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விரிவான கடிதம் எழுதியுள்ளது.

Categories

Tech |