ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுகாண் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும் மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக கூட கொரோனா பரவுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து சீன சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறியுள்ளது.