Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை: “நிவாரணம் ரூ.4500 தருகிறோம்”… போன் வந்தா வங்கி கணக்கை சொல்லிடாதீங்க..!!

பிரதமரின் கொரோனா நிவாரணமாக 4500 ரூபாய் வழங்குவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகின்றது.

வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறி பிரதமர் மோடி கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கொடுக்கப் போகிறார். இதில் முதல் கட்டமாக ரூபாய் 25 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பப்படும். அதனால் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கூறுங்கள் என்று பேசுகின்றனர். அதை நம்பி மக்கள் கூறும் வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று அவர்களின் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளன. தற்போது பெண்கள் இவ்வாறு பேசி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு கும்பலாக சேர்ந்து இந்த செயலை செய்து வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதால் மக்கள், யார் தொலைபேசினாலும் உங்களது வங்கிக் வங்கி எண், கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |