Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று மாலை உஷாரா பாருங்க; கண் பார்வை பறிபோகும் என எச்சரிக்கை:

இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் அதை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பறி போகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 5 14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல்  சூரிய கிரகணத்தை பார்த்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் என்று அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை பறிபோகும் என்று தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இன்று மாலை 5 14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட இருக்கின்றது. வெல்டர் கண்ணாடி மூலம் சில வினாடிகள் மட்டுமே கிரகத்தை மக்கள் பார்க்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |