Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டு கேட்டு வாங்கிய மக்கள்… கொடுக்க முடியாத அளவுக்கு…. தேவைபட்ட மனுஸ்மிருதி நூல்… செம ஹேப்பியில் விசிக …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனுஸ்மிருதியில் இந்து மக்களை எப்படி சொல்லி உள்ளது என புத்தகம் அச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் வழங்குவது,  இந்துக்களின் நலன்களுக்கான எங்கள் செயல்பாடு. குறிப்பாக சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சொல்லப்படக்கூடிய அந்த பிரிவினர் எவ்வாறு இந்த சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக சூத்திரர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் ? எவ்வாறு அவர்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள் ? இன்றைக்கு இங்கு நிலவுகின்ற இவ்வளவு பாகுபாடுகளுக்கும், முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும், ஒற்றுமை இல்லாத போக்குகளுக்கும் காரணம் இந்த நூல்தான் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை விநியோகம் செய்கிறோம்.

மக்களாக முன் வந்து கேட்டு கேட்டு வாங்குகிறார்கள். எங்களால் விநியோகம் செய்ய இயலாத அளவிற்கு மக்கள் தேவையை எங்களால் உணர முடிகிறது. RSS  பேரணியை சட்டபூர்வமாக அதை எதிர்கொள்ளட்டும், அதிலே நமக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழ்நாடு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், வட இந்திய மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் கொட்டம் அடிப்பதை போல,  தமிழ்நாட்டிலும் கொட்டமடிக்க விரும்புகிறார்கள்.

இது சமூக நீதிக்கான மண் என்பதை ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரியப்படுத்த விரும்புகிறோம். பிஜேபி அரசியல் ரீதியாக பேரணி நடத்துவதை நாங்கள் இதுவரை எதிர்த்ததில்லை. ஆர்.எஸ்.எஸ் இங்கே பேரணி நடத்துகிறது என்றால், அது மதவெறி அரசியலுக்கு அடித்தளம் விடுகின்றது என்றுதான் பொருள். அது சாதி அடிப்படையில் மக்களை மோதவிட முயற்சிக்கிறது என்ற பொருள். ஆர்.எஸ்.எஸ் இங்கே காலூன்றினால் தமிழ்நாடு மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும். மதவெறி களமாக இது மாறிவிடும் என்கின்ற அச்சத்தால் இதை நாங்கள் எதிர்க்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |