Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞரை தாக்கிய நபர்கள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு… 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

இளைஞரை கொலை முயற்சி செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மேலகன்னிச்சேரியில் அழகுராஜா என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், முனியசாமி, வழிவிட்டான், நாகேந்திரன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அழகுராஜாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து செய்துள்ளனர்.

மேலும் இந்த 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதனை ஏற்ற ஆட்சியர் சந்திரக்கலா அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பேரையூர் காவல்துறையினர் மணிகண்டன், நாகேந்திரன், வழிவிட்டான், முனியசாமி ஆகிய 4 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |