Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உங்க நல்லதுக்கு தானே சொல்லுறோம்… அலட்சியமாக சுற்றி வரும் மக்கள்… தொற்று ஏற்படும் அபாயம்…!!

கொரோனா கட்டுப்பாட்டை பின்பற்றாமல் மீன் சந்தையில் பொதுமக்கள் கூடியதால் தொற்று பரவும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாமல் எந்த விதமான பயமும் இன்றி சாலையில் சுற்றி வருகிறார்கள். இதனை அடுத்து  தமிழக அரசு இன்றிலிருந்து வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் இருக்கும் மீன் சந்தையில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் எந்த விதமான பயமும் இன்றி ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்க கூடியுள்ளனர். மேலும் மீன் வியாபாரிகள் சங்கத்தினரும், காவல்துறையினரும் அம்மக்களிடையே இடைவெளியை பின்பற்றுமாறு அறிவிப்பு வெளியிட்டும் அதை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் பக்கத்தில் நின்று மீன் வாங்கி சென்றுள்ளனர். இதனால் மீன் சந்தையில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |