இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைகளை இழந்து அன்றாட உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. அரசின் உதவிக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர். பீகாரில் பசியால் மக்கள் தவளைகளை பிடித்து சுட்டு சாப்பிடுகின்றனர்.
அதைப்போல், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.