உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோவை மாவட்டம் ஆலாந்துறையை அடுத்த மத்துவராயபுரம் ஊராட்சியிலுள்ள வீடுகளில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் வீடுகளில் வேப்பிலை கட்டி, வாசல்களில் சாணம் தெளித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் கரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.