Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ரவுடியைக் கொன்று காவலர் குடியிருப்பு அருகே வீசிச் சென்ற நபர்கள்!

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜெயபாலை கொலை செய்து கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.

கோரிமேடு பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகேயுள்ள காலி இடத்தில், குப்பை அகற்றும் தொழிலாளி ஒருவர், இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவலளித்தார். உடனே அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் ஏற்கெனவே கொலை வழக்கில் கைதாகி பிணையில் வெளியில் உள்ளதாகவும், வீட்டிற்கு அருகிலுள்ள நண்பர்களுடன் சேர்ந்து தினமும் மது அருந்தி தகராறில் ஈடுபட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவரை மதுபோதையில் யாரேனும் தாக்கி கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவரின் வீட்டு அருகிலேயே கொலை செய்துவிட்டு, வழக்கை திசைத் திருப்புவதற்காக கோரிமேடு பகுதியில் உடலை வீசிச் சென்றிருக்கிறார்களா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |