Categories
உலக செய்திகள்

“காட்டுத்தீ” வீட்டை விட்டு கிளம்பிய மக்கள்… தீயை அணைக்கச் சென்றவர் மரணம்…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதால் பதட்டம் அடைந்து மக்கள் வெளியேறினர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பை சந்தித்த மாகாணங்களில் கலிபோனியாவும் ஒன்று. இந்நிலையில் தற்போது கடுமையான காட்டுத்தீயை கலிபோர்னியா மாகாணம் எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுகையில் “மின்னல் தாக்குதல்களால் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள வனப்பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 1100 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கலிஃபோர்னியாவில் மட்டுமல்லாமல் சான்பிரான்சிஸ்கோவிலுல் காட்டுத் தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளனர். இதுவரை 20,234 ஹெக்டர் பரப்பளவுள்ள  நிலங்கள் இந்த காட்டுத்தீயினால் சேதமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே கலிபோர்னியா காட்டுத் தீயினால் பெருமளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 84 பேர் பலியானார்கள். மேலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் தீயில் கருகியது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பின் நாசமாகியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |