புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலின் போது மூடப்பட்ட தலைவர்களது சிலைகளை திறக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலுள்ள தலைவர்களது சிலைகள் துணியால் மூடப்பட்டன. ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையிலும் பல இடங்களில் சிலைகள் மறைத்து மூடப்பட்டு இருந்த துணிகள் அகற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் மாங்காடு பகுதிகளிலுள்ள தலைவர்களின் சிலைகளில் வைத்து மூடப்பட்ட துணி மற்றும் சாக்குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் துணியால் மூடப்பட்ட தலைவர்களது சிலைகள் திறக்க சம்பத்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.