வாணியம்பாடியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் ஊர் காவல் படை வீரர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேன்னாம்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பெண்மணி பேருந்துக்காக வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஊர்க்காவல் படைவீரர் சபரிநாதன் அந்தப் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது.
மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அடுத்து சக பயணிகள் ஒன்று சேர்ந்து வாக்குவாதம் செய்ததால் சபரிநாதன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதனிடைய அங்கு வந்த போலீசாரிடம் ஊர்க்காவல் படை வீரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.