Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் DMKவுக்கு தீர்ப்பு எழுதும் மக்கள்: கரு.நாகராஜன் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அகில இந்திய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரை…  ஒரு ஆற்றல்மிக்க தலைவரை நீங்கள் மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ?  இப்படி எல்லாம் பேசுவது தவறு. நீங்கள் மேடை ஏறி வந்தால் நாங்கள் என சும்மா இருப்போமா என்று, எங்களுடைய மாநில துணைத்தலைவர் முன்னாள் ராஜசபை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

இந்த கேள்விக்கு பதில் தான் அவர்கள் மேடையில் சொல்ல வேண்டும். பதில் பேசலாம், அறிக்கை கொடுக்கலாம். ஆனால் அவருடைய  வீட்டுக்கு போய்….  தூத்துக்குடியில் ரவுடிகளை கூட்டிட்டு போய்…  அங்கு இருக்கின்ற திமுக உடைய கவுன்சிலர் ராமகிருஷ்ணன் 47வது வார்ட் கவுன்சிலர்… தூத்துக்குடி மாநகராட்சி 30 வார்டு கவுன்சிலர் திருமதி அதிர்ஷ்ட மணி என்பவருடைய கணவர் ரவீந்திரன்…

இவர்களெல்லாம் 10, 30 கூட்டிட்டு போய் சசிகலா புஷ்பாவின் வீட்டை அடித்து நொறுக்கி, அவர்கள் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இனோவா காரை அடித்து நொறுக்கி,  சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து,  அங்கே மிகவும் ஆபாசமான கோஷங்களை எழுப்பி சென்றிருக்கிறார்கள்.

அராஜக போக்கு, ரவுஷம் மக்களுக்கு தெரியும். மேலும் திமுக முன்பைவிட  அதிகமாக ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை கொண்டு போய் சொல்ல போறோம். மக்களிடம் தான் தீர்ப்பு இருக்கிறது. சட்டத்தில் நீதி கிடைக்காவிட்டால்,  மக்கள் தீர்ப்பு இருக்கிறது. மக்கள் தீர்ப்பு விரைவில் 2024 வரப்போகிறது, அப்போது பார்ப்போம். பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள், இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையை தலைவர் அறிவிப்பார்.

Categories

Tech |