Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே ஒரே இடத்துலையா… முகம் சுளிக்கும் பொதுமக்கள்… ஏதாவது நடவடிக்கை எடுங்க…!!

கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லை குட்டபாளையம் பகுதியின் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில்  தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்த கழிவு நீரில் கொசுக்கள் மற்றும் கிருமிகள் இருப்பதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த கால்வாய் செல்லும் வழியில் செடிகள் முளைத்து புதர் போல் காட்சியளிக்கிறது. இந்த கழிவுநீர் வடிகால் போதிய அளவு துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் கிடக்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் குடிநீர் உபயோகத்திற்கு பயன்படும் குடிநீர் குழாய் இணைப்பானது இந்த கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய்க்கு அருகிலேயே அமைக்கப்பட்டு விட்டது. இதனால் இங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் கழிவுநீர் தேங்கி இருப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்கின்றனர். இதனால் கழிவு நீர் தேங்காதவாறு அதனை சரி செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |