Categories
லைப் ஸ்டைல்

மூட்டு வலி உள்ளவர்கள்… “இந்தப் பழக்கத்தை கட்டாயம் மாற்றிக் கொள்வது அவசியம்”… என்ன தெரியுமா..?

மூட்டுவலி வந்துவிட்டால் வாழ்க்கையே மாறிவிடும். சிறு சிறு வேலைகளை கூட நம்மால் செய்யமுடியாமல் அவஸ்தையாகிவிடும்.

மூட்டுவலியை சரி செய்ய சில குறிப்புகள்:

நன்கு நேராக , நிமிர்ந்து உட்கார, நிற்க பழக வேண்டும்.முதுகு தண்டை நிமிர்த்தியபடி அமர்வதால் நல்ல பலன் கிடைக்கும். குதிகால் செருப்பு பயன்படுத்துவதை பெண்கள் தவிர்பது நல்லது. நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போது அதற்கென உள்ள செருப்புகளை உபயோகிக்க பழக வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் ஒரேடியாக செய்யாமல் சிறிது நேரம் ஓய்வதெடுத்து செய்யலாம்.

அதிக நேரம் அமர்ந்தடி பணியாற்றுபவர்கள் அவ்வப்போது எழுந்து நடந்த பிறகு தொடரலாம்.அமரும் இருக்கைகள் மிருதுவாக இருந்தால் நல்லது. உறக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் இருக்க செய்கிறது. ஒரு மனிதனுக்கு 7 முதல் 9 மணி நேரம் வரை உறக்கம் தேவை. கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும். குளிர் பானம், தேனீர், காபி , கொழுப்பு நிறைந்த உணவுகளை தவர்ப்பது நல்லது .

Categories

Tech |