ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஊரடங்கும் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.