சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை, மக்களால் அவர் புறக்கணிக்கப்படுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும் சீமானின் சர்சை பேச்சு குறித்து விக்கிரவாண்டி பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு பகுதியில் சீமானுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் பேசும் போது, சீமானை மக்கள் புறக்கணிப்பாளர்கள்’ சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை, மக்களால் அவர் புறக்கணிக்கப்படுவார் என்று விமர்சனம் செய்தார்.