Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திட்டமிடப்பட்ட தேரோட்டம்…. கொரோனாவால் ரத்து…. மேற்கூரை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை….!!

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரை வெயில் மழையில் இருந்து காக்க மேற்கூரை அமைத்து தர பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் சாரங்கபாணி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோவிலுக்கு பெரிய தேர், சிறிய தேர் என இரண்டு தேர்கள் உள்ளன. இதில் பெரிய தேரில் சித்திரை மாதமும் சிறிய தேரில் வைகாசி மாதமும் தேரோட்டம் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த திட்டமிட்டு கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. பின்னர் தேரின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டும் திருவிழாக்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சாரங்கபாணி கோவில் தேரோட்டமும் ரத்தானது. இதனால் தேர் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேரோட்டம் நடைபெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் பிரிக்கப்பட்ட தேரின் மேற்கூரை யானது இன்னமும் மூடப்படாமல் தேர் வெட்டவெளியில் கிடைக்கிறது. இதனால் மழை வெயில் மற்றும் பனியால் மரச்சிற்பங்கள் பழுதடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் சிற்பங்களுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |