கொரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் கொரோனா அனுமதிச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளதால் மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் சுமார் 3000 பாதுகாப்பு படை வீரர்கள் பாரிஸில் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டதால் பலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.