இருமலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் அதன் அறிகுறிகளாக இருமல் தொண்டை வறட்சி ஆகியவற்றை தான் அதிகம் கூறுகிறார்கள்.சாதாரணமாக இருமல் வந்தாலே அக்கம் பக்கத்தினர் பதறிவிட, நமக்கு பயம் கொடுத்துவிடுகிறது. ஆகவே இதற்குத் தீர்வு சுக்கு பால் குடிப்பது தான் . நன்றாக சுண்ட காய்ச்சிய பாலில் சுக்கு, மிளகு தட்டி நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்கவிடுங்கள். வடிகட்டும் முன்பு மஞ்சள் பொடி சேர்த்துக் குடிக்க இருமல் கட்டுப்படும்.