Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசைவ பிரியர்களுக்காக “சிக்கன் மிளகு கறி”

சிக்கன் மிளகு கறி

 

தேவையான பொருட்கள்

சிக்கன்                                      – 1 கிலோ
பட்டை                                       –  3
இஞ்சி                                         – 1 துண்டு
மல்லி பொடி                          –  4 ஸ்பூன்
மிளகுத்தூள்                           –  2 ஸ்பூன்
மஞ்சள் பொடி                      –  1 ஸ்பூன்
தக்காளி                                   –  4
கிராம்பு                                    –  4
வெங்காயம்                          –  4
பூண்டு                                       –  10 பல்
எண்ணெய்                             –   தேவைக்கேற்ப
உப்பு                                          –   தேவைக்கேற்ப
கருவேப்பிலை                     –   சிறிது.

செய்முறை 

  • முதலில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக வெட்டி கொள்ளவும்.
  • பூண்டையும் இஞ்சியையும் விழுது போல் அரைத்து எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை மற்றும் கிராம்பு போட்டு தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து மேலும் வதக்கவும்.
  • அதனுடன் தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்.
  • வதங்கியபின் கழுவி வைத்துள்ள சிக்கனை போட்டு வத்தல் பொடி, உப்பு, மல்லி பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கிளறி விடவும்.
  • அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடிவிடவும்.
  • பின்னர் அது நன்றாக கொதித்து வற்றி  வரவும் இறக்கி விடவும். இப்போது சுவை மிகுந்த சிக்கன் மிளகு கறி தயார்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |