மிளகு மீன் பொரியல்
தேவையான பொருள்கள்
மீன்- 500 கிராம்
மிளகு- தூள் ஒரு கரண்டி
உப்பு- தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு -2 மேசைக்கரண்டி
செய்முறை
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும். நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி உப்பு மிளகு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு டால்டா போட்டு காய்ந்ததும் தனித்தனியே மீனை அடுக்கவும். அதன்மேல் உருகிய டால்டாவை சிறிது விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஆறவிடவும்.
இப்போது மீன் பொரியல் தயார்