Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு ரசம் இப்படி செய்யுங்க … சுவையோ சுவை !!!

மிளகு ரசம்

தேவையான பொருட்கள் :

தக்காளி –  1

புளி –  சிறிது

மிளகு – 2 ஸ்பூன்

சீரகம் –  1 ஸ்பூன்

பூண்டு – 8 பற்கள்

பச்சை மிளகாய் –  1

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள்தூள் – சிறிது

பெருங்காயத்தூள் – சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

கடுகு – 1/4 ஸ்பூன்

வரமிளகாய் –  2

எண்ணெய் – தேவைக்கேற்ப

கொத்தமல்லித் தழை –  தேவைக்கேற்ப

மிளகு ரசம்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் மிக்சியில் தக்காளி , மிளகு  , சீரகம் , பூண்டு   , பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை  சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் புளியை கரைத்து அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து தேவையான தண்ணீர் , மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கறிவேப்பிலை , வரமிளகாய் சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி பெருங்காயத்தூள் , உப்பு , கொத்தமல்லித் தழை சேர்த்து கொதிக்க தொடங்கும் நிலையில் இறக்கினால் சுவையான மிளகு ரசம் தயார் !!!

 

Categories

Tech |