வரும் பிப்ரவரி-14 ஆம் தேதி பெப்சி சங்க தேர்தல் நடைபெற உள்ளதாக பேசி சங்க தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில்இன்று செய்தியாளர்களை சந்தித்த பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, “வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளார் என மொத்தம் 13 நபர்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதில் 23 சங்கங்களின் தலைவர்கள் ,செயலாளர், பொருளாளர் என மொத்தம் 69 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என தெரிவித்துள்ளார்.