Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு ஆளுக்கு ரூ. 63 லட்சம் கொடுக்கலாம்…! எலான் மஸ்க்கின் சேட்டை…  கணக்கு போட்ட நெட்டிசன்கள்…!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே  8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின்  படி 8,000,251,675 பேர்)  உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.

ரூபாய்: 35,83,42,60,00,000:

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க கொடுத்த 44 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய பண மதிப்பில் கணக்கீட்டால், ரூபாய் 35,83,42,60,00,000 வரும். இதனை  உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுத்தால்  இந்திய மதிப்பில் 447.91 ரூபாய்.

இந்தியா:

கடந்த 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 1,39,34,00,000 என்ற அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுத்தால், இந்திய மதிப்பில் 2571.71 ரூபாய் கிடைக்கும். இதே போல தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையான 76,481,545 பேருக்கு பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 46,853.47 கொடுக்கலாம்.

ஒரு நபருக்கு ரூ. 63,47,840:

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டமாக உள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும்  7,65,511 ரூபாயாகவும், தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக பெரம்பலூரில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 63,47,840.87 பகிர்ந்து கொடுக்க முடியும். எலான் மஸ்க் அண்ணாச்சி மனசு வாச்சா நாம் அனைவரும் லட்சதீபத்தி தான் என பலரும் இந்த கணக்கீடு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |