Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேரன் கண்ணெதிரே…. முதியவருக்கு நேர்ந்த விபரீதம்…. சேலத்தில் சோகம்….!!

பேரன் கண்ணெதிரே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முதியவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம்பட்டி அம்பேத்கர் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் இவர் தனது பேரன் சிலம்பரசனுடன் மனக்காடு பகுதியில் உள்ள விவசாய காட்டுக்கு சென்றார். அங்கு விவசாய பணி முடிந்ததும் ஆறுமுகம் தன் பேரனுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் சுவேத நதியில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருந்ததால் பேரனுடன், ஆறுமுகம் ஆற்றில் இறங்கி நடந்து வந்தார். இந்நிலையில் பாதி தூரம் அவர்கள் ஆற்றை கடந்து வந்தபோது திடீரென்று தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவ்வேளையில் நிலைதடுமாறிய ஆறுமுகம் வெள்ளப்பெருக்கில் இழுத்து செல்லப்பட்டார்.

அப்போது சுதாரித்துக்கொண்ட அவருடைய பேரன் சிலம்பரசன் தட்டுத்தடுமாறி கரையில் ஏறி ஒதுங்கி விட்டார். இந்நிலையில் தன் கண்ணெதிரே தாத்தா ஆறுமுகம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை பார்த்து பேரன் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஆறுமுகத்தை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் ஆறுமுகம் வெள்ளத்தில் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவேத நதியில் முதியவர் ஆறுமுகத்தை தேடினர். மேலும் அங்குள்ள முள்புதர்களிலும் ஆறுமுகம் சிக்கி இருக்கிறாரா என்று தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |