Categories
அரசியல்

ஆண்டுக்கு ரூ 72,000……25,00,00,000 பேர் பலன்….. முன்னாள் மத்திய அமைச்சர் விளக்கம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விளக்கம் அளித்தார் .

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 72,000 அளிக்கும் திட்டத்தை ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார் . ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு மேலும் கடன் சுமை ஏற்படுமென பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர் . இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் , ராகுல் காந்தி ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து இருக்கிறார். இந்த திட்டத்தின் நோக்கம் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவது. இந்தியாவில் இன்னும் ஏழ்மை இருக்கிறது . அந்த ஏழ்மை குடும்பங்களை குறிவைத்து இந்த திட்டத்தை தயாரித்து இருக்கிறோம். இந்தியாவில் 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தினால் பயன் கிடைக்கும்.

ப சிதம்பரம் க்கான பட முடிவு

மேலும் அவர் கூறும் போது , ஒரு குடும்பத்திலேயே ஐந்து உறுப்பினர்கள் என்று வைத்துக் கொண்டால் 25 கோடி பேருக்கு இத்திட்டத்தினால் பலன் கிடைக்கும் . இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் படிபடியாக செயல்படுத்தப்படும் இதை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின்போது வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் பெறப்பட்டு முறைகேடுகள் நடைபெறாமல் ஏழைகள் அடையாளம் காணப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார் .

Categories

Tech |