வரி ஏய்ப்பு செய்ததாக பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் வருமானவரி சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் கடைவீதி செயல்படும் சின்னஅண்ணன் நகைக்கடை மற்றும் கணபதி ஜுவல் சிட்டி ஆகிய நகைக்கடைகள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட பிரபல நகைக் கடைகள் அதிபர் வீடு உள்ளிட்ட பல இடங்கள் நடந்த இந்த சோதனை 8 மணி நேரத்திற்கு அதிகமாக நடைபெற்றது.அதே போல கோட்டாம்பட்டி சுப்பையன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் , கல்குவாரி பல்வேறு வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைநடத்தினர்.மேலும் இந்த சோதனை பொள்ளாட்சியின் பல்வேறு பகுதியிலும் நடைபெற்றது.