Categories
அரசியல்

பெரியார் மட்டும் தான் சாதி ஒழிப்பு போராளியா..?? சீமான் கேள்வி…!!

சாதி ஒழிப்பு என்றாலே பெரியார் மட்டும்தானா  என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை தான் சொல்கிறார்கள் அப்படி ஆனால் அவருக்கு முன்னால் வந்த இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் சாதியை வளர்த்தார்களா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image result for சீமான்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய மறைந்த இரட்டைமலை சீனிவாசனின் 74 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சாதி ஒழிப்புக்கு குரல் கொடுத்த தமிழர்களின் அடையாளங்களை அழிக்க பார்க்கிறார்கள் என்றும் சாதி மதத்தை மறந்தால் தான் தமிழர் என்ற உணர்வு வரும் என்றும் சீமான் கூறினார்.

Categories

Tech |