திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மாறன் பேச்சுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த பின்பு பேட்டியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமைச் செயலாளர் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா ? என தயாநிதி மாறன் குறிப்பிட்டது சர்சையை கிளப்பி பல விமர்சனங்களை எழுப்பியது.இவரின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் கண்டித்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்க என்ன தாழ்த்தபட்டவர்களா?சமூகவெறுப்பு, அவமதிப்பு,உரிமை மறுப்பு, தலித்மக்களுக்கு இவைகளை செய்யலாம் என ஒப்புக்கொள்கிறீர்களா? சமூகநீதி அறியாமையால் தலித்வெறுப்பு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இயல்பாக மண்டிக்கிடக்கிறது என எப்போது உணர்வீர்கள் கழகங்களே? #பெரியாரை_மறந்த_கழகங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
நாங்க என்ன தாழ்த்தபட்டவர்களா?சமூகவெறுப்பு, அவமதிப்பு,உரிமை மறுப்பு, தலித்மக்களுக்கு இவைகளை செய்யலாம் என ஒப்புக்கொள்கிறீர்களா? சமூகநீதி அறியாமையால் தலித்வெறுப்பு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இயல்பாக மண்டிக்கிடக்கிறது என எப்போது உணர்வீர்கள் கழகங்களே? #பெரியாரை_மறந்த_கழகங்கள்
— pa.ranjith (@beemji) May 15, 2020