Categories
தேசிய செய்திகள்

இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு…. அவசர ஒப்புதலுக்கு அனுமதி – மத்திய அரசு…!!

கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பல நிறுவனங்கள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் சார்பில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கோவிஷில்டு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் பைசர் நிறுவனமும் ஒரு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் கோவிஷில்டு தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. மேலும் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து  இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |