நாடு முழுவதும் உள்ள ஆரஞ்சு மாவட்டங்களில் பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான மற்றும் உள்-மாவட்டங்களில் பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வில் இன்று சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிநபர், டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலின் வேகம் குறையாததால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது.
இந்த நிலையோடு 2ம் கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் என தெரிவித்திருந்தது. இதற்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது. சிவப்பு நிறப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு தொடரும், அதேசமயம் ஆரஞ்சு பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் செயல்பட அனுமதி வழங்கபடலாம்.
பச்சை நிறப்பகுதியில் விலக்கு வழங்க மாநில அரசு நிலையை ஆராய்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று மேலும் கட்டுப்பாட்டை தெரிவித்துள்ளது. அதில், ஆரஞ்சு மாவட்டங்களில் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆரஞ்சு மாவட்டங்களில் ஆரஞ்சு மண்டலங்களில், தனிநபர்கள் செல்லவும் மற்றும் வாகனங்களின் மாவட்டங்களுக்கு இடையேயான இயங்கவும் அனுமதி வழங்கப்படுவதாக தற்போது தெரிவித்துள்ளது.