Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இருந்து தமிழக அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் 31.10.2021ஆம் தேதி காலை 6மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே போல பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் பொதுமக்கள் தங்களது குறைகளை தீர்வு காணும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து இருக்கின்றன.

எனவே பொதுமக்களுடைய சிரமத்தையும் குறைக்கும் நோக்கத்துடன் அனைத்து மாவட்ட அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்,  மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கொரோனா பரவல்  தடுப்பு வழிகாட்டு நெறிமுறை அனுமதிக்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |