Categories
மாநில செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி”… சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க… உயர்நீதிமன்றம் உத்தரவு…

வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை அறநிலையத் துறையினர் சேகரித்து வைத்து நீர்நிலைகளில் கரைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு கோவில்களில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை மொத்தமாக சேர்த்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு  கொடுத்துள்ளது. இது குறித்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவற்றை தனிநபர்கள் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் அனுமதி கொடுத்தனர்.

அதே சமயம் பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் போடப்பட்டுள்ள தடையை மீறினால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர். மேலும், வீட்டில் இருந்து கொண்டு வந்து கோவில்களில் வைக்கப்படும் சிலைகளை, அறநிலைய துறையே சேகரித்து வைத்துக் கொண்டு கரைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த நீதிபதிகள், அறநிலையத் துறையினர் சேகரித்து நீர்நிலைகளில் கரைக்க உத்தரவு வழங்கினர்.

Categories

Tech |