குழந்தையை தத்தெடுக்க தேவைப்படும் முக்கிய விதிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
குழந்தையை தத்தெடுக்க இக்காலகட்டத்தில் பலரும் முன்வருகின்றனர். அந்த வகையில், குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியினர் ஒரு நல்ல மன உடல் நலம் பொருந்தியவர்களாகவும், பொருளாதார ரீதியில் குடும்பத்தை சமாளிக்க கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
திருமணமானவர்கள் மிக சுலபமாக குழந்தையை தத்தெடுக்கலாம். அதேபோல் தனி பெண்மணியும் ஆண், பெண் குழந்தைகளை தத்தெடுக்கலாம். ஆனால் தனி ஆண் மட்டும் பெண் குழந்தையை தத்து எடுக்க முடியாது, ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும். அதே போல் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பின் தான் தத்தெடுக்க திருமண தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.