Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பேருந்துகள் இயக்க அனுமதி….! மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு….!!

நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து,  சாலை மார்க்கமாக மாநிலங்களுக்கு இடையேயான வாகனப் போக்குவரத்து, பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது உள்ளிட்ட விஷயங்களில் இன்னமும் தடை நீடிக்கிறது. நாடு முழுவதும் திருமணங்கள், இறுதிச்சடங்கு, திருவிழாக்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது. பச்சை ஆரஞ்சு போன்ற பகுதிகளில் அதிக அளவில் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன

60 வயதான முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். பச்சை மண்டலங்களில் 50% இருக்கை வசதியுடன் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று 21 நாட்களுக்கு இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும்.

Categories

Tech |