Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி : மாவட்ட ஆட்சியர்..!

திருப்பூரில் வரும் 6ம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

மேலும், தொழிலாளர்களை நிறுவனங்களே வாகன வசதி செய்து கொடுத்து அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு தொழிலாளர்கள் உடல்நலனை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அரசின் அனுமதியோடு சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 3ம் கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத. மேலும், ஆரஞ்சி, சிவப்பு, பச்சை மண்டலங்களில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு இல்லை என தெரிவித்தது.

50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் எனவும் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்து ஆரஞ்சு, சிவப்பு, பச்சை மண்டலங்களுக்கு பொருந்தும் எனவும் விளக்கம் அளித்திருந்தது. இதையடுத்து, இன்று பின்னலாடை நிறுவனங்கள் இயங்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

Categories

Tech |