Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் நிபந்தனைகளுடன் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க அனுமதி!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் தமிழக சில தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முக கவசம் , சமூக விலகலை பின்பற்றி கட்டுமான பணிகளை தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்த பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

முன்னதாக ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும். 1000 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும்.
தொழில் நிறுவன வளாகத்திற்குள் தொழிலாளர்கள் வரும் போது, வெளியே செல்லும் போது தெர்மல் ஸ்கேன் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி இருக்க வேண்டும் சோப்பு அல்லது சானிடைசர் மூலம் தொழிலாளர்கள் தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 55 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அழைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |