Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நெருக்கம் தீபாவளி பண்டிகை…. பலகாங்காரங்கள் தயாரித்து விற்பவர்களுக்கு…. கலெக்டரின் அறிவிப்பு….!!!!

பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தீபாவளி பண்டிகை நாட்களில் தற்காலிக உணவு கூடங்கள் வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்களின் ஆர்டர் தயாரிக்கப்படும் இனப்பு மற்றும் கார உணவு வகைகள் ஆகியவை உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பேக்கரி வைத்து நடத்துபவர்கள் கலப்படம் இல்லாத மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கும் உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான அளவுகளை கெமிக்கல் அல்லது நிறமிகளை சேர்த்தால் கடும் தண்டனை விதிக்கப்படும். மேலும் உணவுப் பொருட்களுக்கான விவர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முகவரி, உணவுப் பொருளின் பெயர், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, பாதுகாப்புத் துறையின் உரிமம் எண், பேட்ச் எண், லாட் எண், சைவ குறியீடு ஆகியவை அவசியம் குறிப்பிட வேண்டும். மேலும் உணவுப் பொருட்களை கிருமி தொற்று இல்லாத சூழலில் வைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பொதுமக்களும் உணவுப் பொருட்களை வாங்கும் போது உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |