Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொய்யாக எழுதப்பட்ட கணக்கு…. அரசு ஊழியர் செய்த செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வளர்ச்சி பணிக்கான நிதியிலிருந்து கையாடல் செய்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பணப்பாக்கம் பேரூராட்சியில் கடந்த 2018 – 19 ஆம் ஆண்டு சம்பத்குமார் என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம், சாலை அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பல லட்ச ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பத்குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் கடந்த 2018 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி டெண்டர் விட்டதும் சம்பத்குமார் செய்யாத பணிகளுக்கு போலியாக பில் தயாரித்து நிதி முறைகேடு ரூ. 7 லட்சத்து 20 ஆயிரத்து 534 பணத்தை கையாடல் செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சம்பத்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இதுபற்றி காவல்துறையினர் தரப்பில் கூறும்போது, சம்பத்குமார் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் பேரூராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தனக்கு வேண்டிய நபர்களுக்கு டெண்டர் விட்டுள்ளார்.

ஆனால் அதற்கான பொருள்களை வாங்காமல் போலியான பில் தயாரித்து பணத்தை கையாடல் செய்துள்ளார். மேலும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்களை சீரமைப்பது, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரெயின் கோட்  மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் தைப்பதற்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு மார்க்கெட் நிலவரத்தை விட அதிக விலையில் பில் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அலுவலக ஆவணத்தில் வாங்காத பொருட்களுக்கும் பில் வைத்து கணக்கு காட்டியுள்ளார். இவ்வாறாக சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் சம்பத்குமார்  ரூ. 7 லட்சத்து 20 ஆயிரத்து 534 பணத்தை கையாடல் செய்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |