கீரனூர் அருகே அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி திடீரென உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீரனூரில் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் சௌமியா (18). அவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி .காம் பயின்று வருகிறார் .கொரோன பாதிப்பின் காரணமாக கல்லூரிகள் திறக்காத நிலையில் வீட்டில் இருந்துள்ளார். தன்வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்தார். விறகு சரியாக எரியாத காரணத்தினால் பக்கத்திலுள்ள மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி உள்ளார் .
அப்பொழுது திடீரென விறகில் மிக வேகமாக தீப்பற்ற ஆரம்பித்த நிலையில் அத்தீ சௌமியாவின் உடையிலும் பற்ற தொடங்கியது. சௌமியாவின் அலறலைக் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் ஏதோ சத்தம் கேட்கிறது என்று நினைத்து வந்து பார்த்தார்கள் அப்போது சௌமியாவின் உடையில் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தீயை அணைத்து சௌமியாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தன. ஆனால் சவுமியா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். தன் மகள் சௌமியா தீக்கு இரையான சம்பவம் பெற்றோர்களுக்கு மிகுந்த சோகத்தையும் மன உளைச்சலையும் அளித்தது. இதைப்பற்றி புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.