உலகளவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பரமாரிப்பாளரை இழந்து வாடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பாரமரிப்பளாரை இழந்து தவிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனையடுத்து இதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பத்தாயிரம் பேர் உள்ளதாக கூறுகின்றனர். இந்த குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தவர்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமெரிக்கா நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் , இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்கள் போன்ற சர்வதேச ஆய்வாளர்களின் குழு 21 நாடுகளின் முடிவுகளை தொகுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் உலக அளவில் தொற்றினால் இறந்த ஒட்டு மொத்த எண்ணிக்கையில் 77% பேர் பெற்றோர்கள் என்பது தெரியவந்துள்ளது . மேலும் மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை 14 மாதங்களில் கொரோனா தொற்றின் விளைவாக சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளரை இழந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.