கடற்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவு ஒன்று உள்ளது. இந்த தீவில் Carl Davies என்ற 33 வயது பிரித்தானியா கடற்படை வீரர் கடந்த 2011 ஆம் ஆண்டு மர்ம முறையில் உயிரிழந்துள்ளார். இவர் அடித்து நொறுக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு நீரோடையின் அருகே சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் Vincent Madoure என்பவருக்கு மட்டும் கடந்த 2017 ஆம் ஆண்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுகள் விலகிக் கொள்ளப்பட்டன.
இதனை தொடர்ந்து Vincent மீதான குற்றமும் போதிய ஆதாரம் இல்லை என்பதால் விலக்கப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலை ஆனார். இதனால் தங்கள் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று Carlன் பெற்றோர் போராடி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூட்டணியையும் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல எவரும் முன்வரவில்லை. குறிப்பாக தன் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தாய் Maria Davies அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது, இந்த சம்பவம் குறித்து முன் வந்து கூறுபவர்களுக்கு 10,000 பவுண்டுகள் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னராவது எவரேனும் தகவல் தெரிவிப்பார்கள் என்று நம்புகின்றனர். அவர்கள் உண்மையை அறிய விரும்புவதாகவும் தங்கள் மகன் இறந்த துக்கத்தை அனுசரிக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.