Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ரோவர்… 2-வது முயற்சியில் தோல்வி… நாசா பரபரப்பு தகவல்..!!

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் பூமிக்கு செவ்வாய் கிரகத்தினை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளனவா என்பது குறித்த ஆய்வுக்காக மண் துகள்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நாசா, பெர்சவரன்ஸ் ரோவர் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மாதிரிகளை எடுப்பதற்கான கருவி மற்றும் தரையில் துளையிடுவதற்கான கருவி ஆகியவை பெர்சவரன்ஸ் ரோவரில் 7 மீட்டர் நீளமுள்ள ரோபோ கையில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 43 டைட்டானியம் குழாய்களும் மாதிரிகளை சேமித்து வைப்பதற்காக உள்ளன.

அந்த வகையில் தனது முதல் முயற்சியில் பெர்சவரன்ஸ் ரோவர் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் தரையில் வெற்றிகரமாக துளையிட்டது. ஆனால் அடுத்த முயற்சியில் பாறைகளை எடுத்து குழாயில் அடைத்து மூடுவதில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும், பெர்சவரன்ஸ் ரோவரின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாசா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Categories

Tech |