போப் பிரான்சிஸ் பெயரில் சுவிட்சர்லாந்தில் தனிப்பட்ட வங்கி கணக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது.
கார்த்தினல் ஒருவர் நிதி மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பாக சிக்குவதும், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் சில நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நடந்தது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் சுவிஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் போப் பிரான்சிஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வத்திக்கான் நிர்வாகம் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி காலம் முதலே நிதி தொடர்பாக சுவிட்சர்லாந்துடன் இணைந்து செயல்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 91 மில்லியன் யூரோ மதிப்பில் 140 வத்திக்கான் சொத்துக்கள் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், அவை ஜெனீவா மற்றும் லொசேன் பகுதியில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். UBS வங்கியில் போப் பிரான்சிஸ் பெயரில் தனிப்பட்ட வங்கி கணக்கு 2015 முதல் 2011-ஆம் ஆண்டு வரை பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கணக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரோமுக்கு மொத்த நிதியையும் மீட்டு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் அப்படியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.