தனிநபர் கடன் வாங்க போறீங்களா அப்ப கட்டாயம் இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்றே பயன்படுத்தும் ஒரு வழி. வீடு வாங்குவது அல்லது கல்விக்கு போன்ற பல்வேறு தேவைகளுக்கு நாம் கடன் வாங்குவதற்கு தனிநபர் கடனை பயன்படுத்திக் கொள்கின்றோம். உண்மையில் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் நீங்கள் தனிப்பட்ட கடன்களை பெறுவதற்கு பல்வேறு சலுகைகளை பெறலாம். அவை எளிதில் பெறப்பட்டாலும், கிட்டத்தட்ட உடனடி மனநிறைவு அளித்தாலும், கடனுக்கான வட்டி விகிதங்கள் வேறு எந்தக் கடனையும் விட மிக அதிகம். தனிநபர் கடன் பாதுகாப்பற்ற கடன் என்பது இதற்கு காரணம்.
தனிநபர் கடன் பெற நீங்கள் சொத்து தங்க நகை போன்ற விஷயங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் கடன் தொகை மற்றும் வட்டி விகிதம் உங்கள் வருமானத்தை பொறுத்தே அமையும். தனிப்பட்ட கடன் வெவ்வேறு பாதிப்புகள் உள்ளது. இதன் மூலம் அதிக அளவு வட்டி வசூல் செய்யப்படுகின்றது. நீங்கள் வாங்கும் வருமானம் வட்டியிலேயே காலியாகிவிடும். உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனமாக இருந்தாலும், சரி வங்கிகளாக இருந்தாலும் சரி ஏற்கனவே உங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் பார்த்திருப்பார்கள்.
உங்களுக்கு அதனை பொறுத்து கடன் வழங்குவார்கள். ஆனால் திருப்பி செலுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தனிப்பட்ட கடன்கள் அதிக வட்டி விகிதத்துடன் வருவதால் உங்களால் திருப்பி செலுத்தும் போது மிகுந்த சிரமம் ஏற்படும். இதை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு கடன் வாங்குங்கள்.