செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சீமான் அண்ணன் பேசுறதுக்கும், நான் பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கு. பி.டி.ஆர். அவர்கள் எனக்கு ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலடியாக நான் பதில் சொல்லியிருந்தேனே தவிர, மேடையல நானாக செருப்பை எடுக்கவில்லை. பி.டி.ஆர். அவருடைய டுவிட்டை நீங்கள் முதலில் படிங்க. செருப்பை பற்றியும், என்னை பற்றியும் என்ன பேசிருந்தார் அப்படின்னு . அதற்கு கூட நான் பதில் சொல்ல வில்லை என்றால் நான் எல்லாம் தன்மானம் இருக்கக்கூடிய அரசியல்வாதி.
எதையும் வித்துப்பொழச்சி, ஒருத்தர் கை கால்ல விழுந்து இந்த பதவியை வாங்கி எல்லாம் வரல. பதவி கொடுத்திருக்காங்க அப்படித்தான் வேலை செய்வேன் நான். இதை கட்டிப்பிடிச்சு தான் இந்த பதவியில இருக்கணும் அப்படின்னா அந்த பதவியில இருக்க எனக்கு ஆசை எல்லாம் கிடையாது.
இதைவிட எனக்கு முக்கியமான பல வேலைகள் தமிழ்நாட்டில் இருக்கு, மக்கள் கிட்ட இருக்கு. அதனால அண்டிப்பிழைத்து ஒருத்தரை ஒட்டி பிழைத்து, இப்படிதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் அண்ணாமலைக்கு கிடையாது. அது பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டனாக இருப்பது மிகப்பெரிய மரியாதை. இப்படி கண்ணியமாக பேசி தான் இந்த கட்சியினுடைய தலைவராக இருக்க வேண்டும் என்றால் எனக்கு தலைவர் பதவியே தேவையில்லை என தெரிவித்தார்.